கிரிக்கெட்

20 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: நியூசிலாந்து அணியிடம் வெறி இல்லை - பிரெண்டம் மெக்கல்லம்

20 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.

ஆக்லாந்து,

20 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இந்த தோல்வி குறித்து முன்னாள் வீரர் பிரெண்டம் மெக்கல்லம் கூறுகையில்,

நியூசிலாந்து அணி ஒரு துப்பாக்கியை கொண்டு வந்திருந்தது. ஆனால் அதிலிருந்து குண்டுகள் வெடிக்கப்படவில்லை. இது ஒரு பறிபோன வாய்ப்பு.

நியூசிலாந்து அணி வீரர்களிடம் ரன்கள் குவிக்க வேண்டும் என்கிற வெறி இல்லை. அவர்கள் இன்னும் தீவிரமாக களத்தில் விளையாடியிருக்கலாம்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் போது அதிக ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டும். அவர்கள் எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

நியூசிலாந்து அணி, இதுபோன்ற இறுதிப்போட்டிகளில் இன்னும் தீவிரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை காண விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்