கோப்புப்படம் 
கிரிக்கெட்

பாகிஸ்தானில் விளையாட சம்மதம் தெரிவித்த நியூசிலாந்து: ரமீஸ் ராஜா தகவல்

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் விளையாட சம்மதம் தெரிவித்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்தார்.

தினத்தந்தி

கராச்சி,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு (2022) டிசம்பர் மற்றும் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலக கோப்பை சூப்பர் லீக் போட்டி தொடருக்கு உட்பட்டதாகும். அத்துடன் 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அங்கு சென்று 5 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டியில் விளையாட ராவல்பிண்டி சென்று விட்டு பாதுகாப்பை காரணம் காட்டி கடைசி நேரத்தில் களம் இறங்க மறுத்து போட்டி தொடரை ரத்து செய்து விட்டு நியூசிலாந்து அணி நாடு திரும்பியது. அதனை சரிக்கட்டும் விதமாக 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் பாகிஸ்தானில் விளையாட அந்த அணி சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா நேற்று தெரிவித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை