கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டித்தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டித்தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஆக்லாண்டு,

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிந்ததும், மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்: கனே வில்லியம்சன் (கேப்டன்), டக் பிரேஸ்வெல், கோலின் டி கிராண்ந்ஹோம், பெர்குசன், (முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டும்) மார்டின் குப்தில், ஸ்காட் குக்கெலின், டேர்ல் மிட்செல், கோலின் முன்ரோ, மிட்செல் சாண்ட்னர், டிம் செபெர்ட் (விக்கெட் கீப்பர்), இஷ் சோதி, டிம் சவுதி, ரோஸ் டெய்லர், பிளேர் டிக்னெர் (மூன்றாவது போட்டிக்கு மட்டும்).

நியூசிலாந்து - இந்தியா மோதும் முதல் 20 ஓவர் போட்டி வெல்லிங்டனில் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி பறிகொடுத்துள்ள நிலையில், 20 ஓவர் போட்டித் தொடரை கைப்பற்ற நியூசிலாந்து அணி தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை