கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதல்முறையாக முதலிடத்தை பிடித்தது

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது.

தினத்தந்தி

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை 2-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை முழுமையாக வென்றதன் மூலம் 2 தரவரிசை புள்ளிகளை கூடுதலாக பெற்று முதல்முறையாக நம்பர் ஒன் அரியணையை அலங்கரித்து இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் நம்பர் ஒன் இடத்தை எட்டிய 7-வது அணி நியூசிலாந்து ஆகும்.

டெஸ்ட் தரவரிசையில் டாப்-5 இடங்களை பிடித்துள்ள அணிகள் வருமாறு:-

தரவரிசை அணி புள்ளி

1. நியூசிலாந்து 118

2. ஆஸ்திரேலியா 116

3. இந்தியா 114

4. இங்கிலாந்து 106

5. தென்ஆப்பிரிக்கா 96

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு