கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டியில் அடுத்த ஆண்டு டோனி விளையாடுவாரா?

சென்னை அணிக்காக நீங்கள் தொடர்ந்து விளையாடுவீர்களா? என்று வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு டோனி பதிலளிக்கையில் 'பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்’ என்றார்.

தினத்தந்தி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று மாலை நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் போட்ட பிறகு, அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியிலும் சென்னை அணிக்காக நீங்கள் தொடர்ந்து விளையாடுவீர்களா? என்று வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு 40 வயதான கேப்டன் டோனி பதிலளிக்கையில், அடுத்த சீசனிலும் நீங்கள் என்னை மஞ்சள் நிற சீருடையில் பார்க்கலாம். ஆனால் நான் சென்னை அணிக்காக விளையாடுவேனா? என்பது குறித்து யாருக்கும் தெரியாது. ஏனெனில் அடுத்த ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக நிறைய மாற்றங்கள் நடக்க இருக்கின்றன. இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்கவைத்து கொள்ளும் நடைமுறை எப்படி இருக்கும் என்பது தெரியாது. அதேபோல் ஏலத்தில் ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு பணம் செலவிட முடியும் என்பதும் தெரியாது. இப்படிப்பட்ட பல நிலையற்ற தன்மைகள் நிலவுவதால், உறுதியான விதிமுறை தெரிந்த பிறகு தான் இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர முடியும். எனவே என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்