கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் நிசாங்கா, டிக்வெல்லா புதிய சாதனை

இலங்கை- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட்டில் நிசாங்கா, டிக்வெல்லா புதிய சாதனையை படைத்தனர்.

தினத்தந்தி

ஆன்டிகுவா,

இலங்கை- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 169 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 271 ரன்களும் எடுத்தன. 102 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 4-வது நாளான நேற்று முன்தினம் 476 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆகி, எதிரணிக்கு 375 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

6-வது வரிசையில் ஆடிய அறிமுக வீரர் பதும் நிசாங்கா 103 ரன்களும் (252 பந்து, 6 பவுண்டரி), விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா 96 ரன்களும் விளாசினர். அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்த 4-வது இலங்கை வீரர் என்ற சிறப்பை 22 வயதான நிசாங்கா பெற்றார். இதற்கு முன்பு பிரன்டன் குருப்பு, கலுவிதரனா, சமரவீரா ஆகியோர் தங்களது முதலாவது டெஸ்டில் சதம் அடித்திருந்தனர். ஆனால் இவர்கள் 3 பேரும் சொந்த மண்ணில் இச்சாதனையை செய்திருந்தனர்.

எனவே அறிமுக டெஸ்டிலேயே வெளிநாட்டு மண்ணில் சதம் கண்ட முதல் இலங்கை வீரர் என்ற சாதனைக்கு நிசாங்கா சொந்தக்காரர் ஆனார். இதே போல் இதுவரை சதம் ஏதும் அடிக்காத டிக்வெல்லாவுக்கு இது 17-வது அரைசதமாகும். டெஸ்டில் சதம் அடிக்காமல் அதிக அரைசதங்கள் அடித்த சாதனையாளர் வரிசையில் இந்தியாவின் சேத்தன் சவுகானை (16 அரைசதம்) பின்னுக்கு தள்ளி டிக்வெல்லா முதலிடம் பிடித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து