கிரிக்கெட்

எதையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை: கில்

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் நாளை முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. நாளை தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் "நீங்கள் கடந்த மூன்று நான்கள் சீசன்களில் பார்த்தீர்கள் என்றால், நான் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்துள்ளேன். ஆகவே, இந்த சீசனில் நான் எதையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக நினைக்வில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.