கிரிக்கெட்

நுவான் துஷாராவுக்குப் பதிலாக... ஆர்சிபி அணியில் இணைந்த சிஎஸ்கேவின் முன்னாள் வீரர்

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப் பந்துவீச்சாளர் நுவான் துஷாரா விலகினார்.

சென்னை,

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையில் வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகி வருகின்றனர்.

அந்த வகையில், காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப் பந்துவீச்சாளர் நுவான் துஷாரா விலகினார். இந்த நிலையில், அவருக்கு மாற்று வீரராக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ரிச்சர்ட் கிளீசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிச்சர்ட் கிளீசன் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவர் கடந்த 2024-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், 2025-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.