கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 294 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 294 ரன்கள் குவித்து உள்ளது.

தினத்தந்தி

மான்செஸ்டர்,

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடந்தது. ஆஸ்திரேலிய அணியில் முந்தைய நாள் பயிற்சியின் போது தலையில் பந்து தாக்கியதால் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓய்வு அளிக்கப்பட்டது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய பணித்தார். இதன்படி களம் இறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை.

டேவிட் வார்னர் (6 ரன்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் (16 ரன்) ஏமாற்றம் அளித்தனர். இதைத் தொடர்ந்து மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் அணியை தூக்கி நிறுத்தினர். குறிப்பாக ஸ்டோனிஸ் (43 ரன்), மேக்ஸ்வெல் (77 ரன், 59 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), மிட்செல் மார்ஷ் (73 ரன்) ஆகியோர் அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 294 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் 295 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்