கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர்; இந்திய அணி அறிவிப்பு

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தியாவின் தர்மசாலா, லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.

முதல் போட்டி வருகிற 12ந்தேதி தர்மசாலாவில் உள்ள இமாசல பிரதேச கிரிக்கெட் கூட்டமைப்பு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 2வது போட்டி 15ந்தேதி லக்னோவில் உள்ள ஏ.பி. வாஜ்பாய் ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்திலும், 3வது போட்டி கொல்கத்தா நகரில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்திலும் நடைபெற உள்ளன.

இதற்கான 16 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜானேமன் மலான் சேர்க்கப்பட்டு உள்ளார்.

தென்ஆப்பிரிக்க அணி விவரம்:

குயின்டன் டி காக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தெம்பா பவுமா, ராஸ்ஸி வான் டெர் டஸ்சென், டூ பிளெஸ்சிஸ், கைலே வெர்ரெய்னி, ஹெய்ன்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், ஜோன் ஸ்மட்ஸ், ஆண்டில் பெலுக்வாயோ, லண்டி கிடி, லுத்தோ சிபம்லா, பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், ஆன்ரிச் நார்ஜே, ஜார்ஜ் லிண்டே, கேசவ் மகாராஜ்.

இதேபோன்று இந்த தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய அணி வீரர்கள் விவரம்:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, விராட் கோலி (கேப்டன்), கே.எல். ராகுல், மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட், ஹர்தீக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், யஜ்வேந்திர சஹால், ஜஸ்பிரீத் பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், சுப்மன் கில்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை