கிரிக்கெட்

டி 20 உலகக்கோப்பை: வங்காளதேசம்-ஓமன் அணிகள் இன்று மோதல்

டி 20 உலகக்கோப்பையின் இன்றய ஆட்டத்தில் வங்காளதேசம்-ஓமன் அணிகள் மோதுகின்றன

தினத்தந்தி

மஸ்கட்,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மஸ்கட்டில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் ஜீஷன் மசூத் தலைமையிலான ஓமன் அணி, மக்முதுல்லா தலைமையிலான வங்காளதேசத்துடன் மல்லுகட்டுகிறது. இந்த ஆட்டம் வங்காளதேசத்துக்கு மிகவும் முக்கியமானதாகும். பேட்டிங்கில் சொதப்பியதால் முதலாவது ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் வீழ்ந்த வங்காளதேச அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதே நேரத்தில் ஓமன் அணி தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை