கோப்புப்படம் 
கிரிக்கெட்

ஒமைக்ரான் எதிரொலி: ஆஸ்திரேலியா- நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் தள்ளிவைப்பு

10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியுள்ளதால், தள்ளிவைக்கப்படுகிறது.

தினத்தந்தி

வெலிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று 3 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

இந்த தொடர் வருகிற 30-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக வெளிநாட்டுக்கு சென்று விட்டு திரும்பும் போது நியூசிலாந்து வீரர்கள் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டி உள்ளது. இதில் தளர்வு அளிக்க அந்த நாட்டு அரசு மறுத்து விட்டது.

இதன் காரணமாக இந்த தொடர் தள்ளிவைக்கப்படுவதாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கூட்டாக அறிவித்துள்ளன.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?