கிரிக்கெட்

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களை ஆபாசமாக பேசிய விவகாரம்: ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீது வழக்குப்பதிவு

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மற்றும் நிகழ்ச்சியை நடத்திய கரன் ஜோஹர் மீது ஜோத்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்

பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் "காபி வித் கரண்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்திக் பாண்ட்யா பெண்கள் பற்றி ஆபாசமாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.

நிகழ்ச்சியில் பாண்ட்யாவுடன் ராகுலும் பங்கேற்று இருந்தார். இதன் காரணமாக விசாரணை முடியும் வரை இருவரும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாட தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையை பிசிசிஐ நீக்கிய நிலையில், ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியிலும், கே.எல்.ராகுல் இந்தியா ஏ அணியிலும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பல்வேறு மகளிர் அமைப்புகளின் புகாரை ஏற்று, கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கரண் ஜோஹர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது