கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட்: 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கைக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 300 ரன்கள் குவித்தது. தனது 3-வது சதத்தை எட்டிய தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 118 ரன்களும் ( 115 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), சாரித் அசலன்கா 71 ரன்களும் விளாசினர். அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணியால் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக மார்க்ராம் 96 ரன் சேர்த்து கேட்ச் ஆனார். இதன் மூலம் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது