கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.


* இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்குள் அடியெடுத்து வைத்த சிறிது காலத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பந்து வீசி வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அனைத்து வடிவிலான (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) போட்டிகளுக்கான ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் 6 வீரர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

* சொந்த மண்ணில் இந்த மாத இறுதியில் நடக்கும் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை புதிய தேர்வு குழு தலைவர் மிஸ்பா உல்-ஹக் நேற்று அறிவித்தார். சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியில் பேட்ஸ்மேன் இப்திகர் அகமது, விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், ஆல்-ரவுண்டர் முகமது நவாஸ் ஆகியோர் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். 29 வயதான இப்திகர் அகமது கடைசியாக 2015-ம் ஆண்டில் தேசிய அணியில் ஆடியிருந்தார்.

* முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு சட்டோகிராமில் நடந்த கடைசி லீக்கில் வங்காளதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது. இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் வருகிற 24-ந்தேதி மீண்டும் சந்திக்கின்றன.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு