கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்: பந்து வீச்சாளர் தரவரிசையில் ஹேசில்வுட் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

20 ஓவர் கிரிக்கெட் பந்து வீச்சாளர் தரவரிசையில் ஹேசில்வுட் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தினத்தந்தி

துபாய்,

20 ஓவர் கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவாசையில் டாப்-4 இடங்களில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (805 புள்ளி), முகமது ரிஸ்வான் (798 புள்ளி), தென்ஆப்பிரிக்காவின் மார்க்ராம் (796 புள்ளி), இந்தியாவின் லோகேஷ் ராகுல் (729 புள்ளி) ஆகியோர் மாற்றமின்றி தொடருகிறார்கள். இந்தியாவின் விராட் கோலி 10-வது இடமும், ரோகித் சர்மா 11-வது இடமும் வகிக்கிறார்கள்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 2 இடம் சரிந்து 3-வது இடத்துக்கு (760 புள்ளி) தள்ளப்பட்டார். இதனால் தென்ஆப்பிரிக்காவின் தப்ரைஸ் ஷம்சி (784 புள்ளி) மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார்.

இலங்கைக்கு எதிரான முதல் மூன்று 20 ஓவர் போட்டிகளில் 8 விக்கெட் கைப்பற்றிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் 4 இடம் அதிகரித்து 2-வது இடத்தை (783 புள்ளி) பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். அவர் முதலிடத்தில் உள்ள ஷம்சியை விட ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 21-வது இடத்தில் உள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து