கிரிக்கெட்

ஐபிஎல் 2-வது தகுதி சுற்று: கொல்கத்தாவுக்கு 136 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 135 ரன்கள் சேர்த்துள்ளது.

தினத்தந்தி

ஷார்ஜா,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் போட்டிகள் முடிந்து தற்போது பிளே-ஆப் சுற்று நடந்து வருகிறது. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதையடுத்து நடந்த வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை விரட்டியடித்தது.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் ஷார்ஜாவில் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய டெல்லி அணி, கொல்கத்தா அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் ரன்களை குவிக்க தடுமாறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து