கிரிக்கெட்

'ஆசிய கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்பு' - முன்னாள் வீரர் மஞ்ச்ரேகர்

ஆசிய கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ச்ரேகர் அளித்த பேட்டியில், ஆசிய கோப்பையை வெல்வதில் இந்திய அணி முக்கியமான போட்டியாளராக விளங்கும். அதேநேரத்தில் கோப்பையை வெல்ல இந்தியாவை விட பாகிஸ்தானுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன்.

ஏனெனில் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடிய அனுபவம் அதிகம் கொண்டதாகும். விராட்கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதன் மூலம் இந்திய அணியின் பலம் சற்று குறைந்து தான் இருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவானதாக இருந்தாலும், மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். அதேபோல் நமது பந்து வீச்சும் ஏற்றம் பெற வேண்டியது முக்கியமானதாகும் என்று தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு