கிரிக்கெட்

'மெதுவான ஆடுகளங்களில் எப்படி விளையாடுவது என்று பாகிஸ்தான் வீரர்களுக்கு தெரியவில்லை'- மிஸ்பா உல் ஹக்

மெதுவான ஆடுகளங்களில் எப்படி விளையாடுவது என்று பாகிஸ்தான் வீரர்களுக்கு தெரியவில்லை என அந்த அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் விமர்சித்துள்ளார்.

தினத்தந்தி

லாகூர்,

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை சுருட்டி வீசியது. இதில் பாகிஸ்தான் 191 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆக, இந்த இலக்கை இந்தியா கேப்டன் ரோகித்சர்மா (86 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (53 ரன்) ஆகியோரது அரைசதத்துடன் 30.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. அத்துடன் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையையும் இந்தியா தக்கவைத்துக் கொண்டது.

இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் அளித்த பேட்டியில், 'உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை எளிதாக சொல்லி விட முடியும். ஆசிய கோப்பை மற்றும் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையை திரும்பி பார்த்தால், மெதுவான ஆடுகளங்களில் எப்படி விளையாடுவது என்று பாகிஸ்தான் வீரர்களுக்கு தெரியவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறுவது தெளிவாக தெரியும். இப்போதும் அந்த நிலை தான் தொடருகிறது' என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை