கிரிக்கெட்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரை இனவெறி அடிப்படையில் தாக்கி பேசிய பாகிஸ்தான் கேப்டன்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரை இனவெறி சார்ந்து பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது தாக்கி பேசியது தெரிய வந்துள்ளது.

டர்பன்,

தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த நிலையில் 2வது ஒரு நாள் போட்டி டர்பன் நகரில் நடந்தது. இதில் தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் வான்டர் டஸ்சென் மற்றும் பெஹ்லுகுவாயோ இணை தொடர்ந்து ஆட்டமிழக்காமல் ஆடி வந்தது.

இதனால் ஆத்திரமுற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்ப்ராஸ் அகமது போட்டியின்பொழுது, ஹே கருப்பு நண்பரே. இன்று உன்னுடைய தாய் எங்கு அமர்ந்து இருக்கிறார்? உனக்கு இன்று என்ன கூறுவதற்காக அவரை இங்கு அழைத்து வந்திருக்கிறாய்? என பேசியுள்ளார்.

இது ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவாகி உள்ளது. எனினும், இந்த போட்டியில் பாகிஸ்தானை தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தியது. வான்டர் டஸ்சென் மற்றும் பெஹ்லுகுவாயோ இணை அரை சதம் கடந்ததுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் 1-1 என்ற கணக்கில் போட்டி தொடர் சமநிலையில் உள்ளது.

அகமதுவின் இந்த இனவெறி பேச்சின் மீது போட்டி அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டால் ஐ.சி.சி.யால் சர்ப்ராஸ் தடை செய்யப்பட கூடிய நிலை ஏற்படும்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு