கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சயீத் அஜ்மல் ஓய்வு, ஐசிசி மீது கடும் விமர்சனம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

கராச்சி,

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீது அஜ்மல் (40), சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த அஜ்மல், இதுவரை 113 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 184 விக்கெட்டுகளையும், 35 டெஸ்ட் போட்டிகளின் மூலம் 178 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அத்துடன், 64 டி20 ஆட்டங்களில் 85 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

அவரது பந்துவீச்சு முறை தொடர்பாக முதலில் 2009-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது சர்ச்சை எழுந்தது. அப்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட அஜ்மல், மீண்டும் களத்துக்கு திரும்பினார். எனினும், 2014-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியின்போது மீண்டும் அவரது பந்துவீச்சு தொடர்பாக புகார் எழுந்தது.

ஓய்வு குறித்து பேசிய அஜ்மல் கூறுகையில், கனத்த இதயத்துடன் ஓய்வு பெறுகிறேன். பந்துவீச்சு தொடர்பான ஐசிசியின் நெறிமுறைகள் கடுமையாக இருப்பதாகக் கருதுகிறேன். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் அனைத்து பந்துவீச்சாளர்களையும் அதன்படி சோதித்தால், நிச்சயம் 90 சதவீதம் பேர் தோல்வி அடைவார்கள். என்றார்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை