கிரிக்கெட்

பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு முன்னேற இந்தியா உதவ வேண்டும் -அக்தர்

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு முன்னேற இந்திய அணி உதவி செய்ய வேண்டும்.

தினத்தந்தி

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், யூ டியூப்பில் செய்துள்ள வீடியோ பதிவேற்றம் ஒன்றில் கூறியிருப்பதாவது:-

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு முன்னேற இந்திய அணி உதவி செய்ய வேண்டும். அது எப்படி என்கிறீர்களா? இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தால் அந்த அணி வெளியேறி விடும். அதன் பிறகு பாகிஸ்தான் அணி எஞ்சிய இரு லீக்கிலும் (ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் எதிராக) வெற்றி பெற்று 11 புள்ளிகளுடன் அரைஇறுதிக்கு தகுதி பெற முடியும். அவ்வாறு நடந்தால் அரைஇறுதியில் மீண்டும் இந்தியாவை சந்திக்க வாய்ப்பு உருவாகும். இவ்வாறு அக்தர் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்