லாகூர்,
பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
நடந்துமுடிந்த இரு போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்துள்ள நிலையில், தொடரை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும்.