கிரிக்கெட்

பப்புவா வீரர் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி அசத்தல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பப்புவா வீரர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

தினத்தந்தி

துபாய்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 14 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

துபாயில் நேற்று நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் பெர்முடா- பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பெர்முடா 17.2 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. பப்புவா அணியின் வேகப்பந்து வீச்சாளர் 25 வயதான நார்மன் வானா தனது முதலாவது ஓவரில் எதிரணியின் கேப்டன் டியான் ஸ்டோவெல் (1 ரன்), காமா லிவரோக் (0), டாரெல் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நிகழ்த்தப்பட்ட 11-வது ஹாட்ரிக் இதுவாகும். இந்த எளிய இலக்கை பப்புவா அணி 10.2 ஓவர்களில் எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்