பெங்களூரு,
அடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டு இருக்கும் இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான பார்த்தீவ் பட்டேலை, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் டுவிட்டர் மூலம் ஜாலியாக கிண்டல் செய்து இருந்தார். அவர் தனது பதிவில், பெங்களூரு அணிக்காக ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்சுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் வாய்ப்பு பார்த்தீவ் பட்டேலுக்கு கிடைத்து இருப்பது அதிர்ஷ்டம். இனிமேல் உங்களுக்கு எல்லாம் எளிதாக இருக்கும். அவர் உங்களை விட உயரமானவர். அவர் மட்டுமல்ல நிறைய வீரர்கள்... என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பார்த்தீவ் பட்டேல் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ஆரோன் பிஞ்ச் அற்புதமான வீரர். அவருடன் இணைந்து விளையாட விரும்புகிறேன். ஆனால் அவர் உங்களை போல் கிடையாது. அவர் ஆஸ்திரேலியாவில் அதிக நேரத்தை செலவிடுகிறார். இந்த நேரத்தில் உங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.