கிரிக்கெட்

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரை தவிர்க்கும் பேட் கம்மின்ஸ்..? ரசிகர்கள் அதிர்ச்சி

எங்களுடைய கிரிக்கெட் போட்டிகளிலேயே அதிக வெற்றிகளை பெற்ற ஆண்டாக அதனை மாற்றுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

மெல்போர்ன்

ஐ.பி.எல். போட்டி தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் பேட் கம்மின்ஸ். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான இவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல்.லில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. சொந்த நாட்டில் ஆகஸ்டில் நடைபெற உள்ள வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட தயாராவதற்காக அவர் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை ஒரு நாள் போட்டி மற்றும் ஆஷஸ் தொடர் ஆகியவற்றுக்கு தயாராவதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபற்றி அவர் கூறும்போது, எனக்கு காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அதனால், எதிலும் சிக்க விரும்பவில்லை. எனக்கு டெஸ்ட் மற்றும் உலக கோப்பை ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதே முன்னுரிமையான விசயம் என்று கூறியுள்ளார். இதேபோன்று தென்ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து போட்டிகள் காத்திருக்கின்றன.

இந்தியாவில் விளையாடினால், பின்னர் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முன்னர் நிச்சயம் ஓய்வு தேவைப்படும் என்று தைரியத்துடனேயே கூறுகிறேன் என்றார். அடுத்த 18 மாதங்கள் பெரிய உந்துதலாக இருக்கும். ஆனால், அதனை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம். எங்களுடைய கிரிக்கெட் போட்டிகளிலேயே அதிக வெற்றிகளை பெற்ற ஆண்டாக அதனை மாற்றுவோம் என்று அவர் கூறியுள்ளார்.