கிரிக்கெட்

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக உலகக்கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் நியமனம்!

தலைமைப் பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட் ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து இழந்ததையடுத்து அப்பதவியில் இருந்து விலகினார்.

தினத்தந்தி

லண்டன்,

இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்டு வந்த முன்னாள் வீரர் பால் காலிங்வுட், அடுத்த மாதம் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரை தலைமைப் பயிற்சியாளராக நீடிப்பார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தலைமைப் பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட், ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் படுமோசமாக இங்கிலாந்து இழந்ததையடுத்து அப்பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியின் போது தலைமைப் பயிற்சியாளராக காலிங்வுட் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். அவரது தலைமையின் கீழ் இங்கிலாந்து அணி 2010ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்