கிரிக்கெட்

‘பிளே-ஆப்’ சுற்றை எட்டப்போவது யார்? - ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி தலா 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ள டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு இதுவே கடைசி லீக் ஆட்டமாகும்.

தினத்தந்தி

இதில் வெற்றி பெறும் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுவதுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை உறுதி செய்யும். தோல்வி அடையும் அணிக்கு, நாளை நடக்கும் ஐதராபாத் அணிக்குரிய இறுதி லீக் ஆட்டத்தின் முடிவை பொறுத்து பிளே-ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா? என்பது தெரிய வரும்.

கம்பீரமாக பயணித்த டெல்லி அணி தடாலடியாக சறுக்கலை சந்தித்துள்ளது. கடைசியாக ஆடிய 4 ஆட்டங்களிலும் (பஞ்சாப், கொல்கத்தா, ஐதராபாத், மும்பைக்கு எதிராக) தொடர்ச்சியாக படுதோல்வி அடைந்தது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அடுத்தடுத்து இரு சதங்கள் அடித்த ஷிகர் தவான் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இதில் இரு டக்-அவுட்டும் அடங்கும். மற்றவர்களின் பேட்டிங்கும் மெச்சும்படி இல்லை. முந்தைய மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெறும் 110 ரன்னில் சுருண்டது. புள்ளி பட்டியலில் ரன்ரேட்டும் வெகுவாக குறைந்து போனது. எனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற பேட்டிங்கில் எழுச்சி பெற வேண்டியது அவசியமாகும்.

இதே நிலைமையில் தான் பெங்களூரு அணியும் இருக்கிறது. கடைசி 3 ஆட்டங்களில் (சென்னை, மும்பை, ஐதராபாத்துக்கு எதிராக) வரிசையாக தோல்வி கண்ட பெங்களூரு அணியும் சீரற்ற பேட்டிங்கால் தவிக்கிறது. கடந்த ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 120 ரன்னில் முடங்கிப்போனது. எனவே தேவ்தத் படிக்கல், கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச் ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்கள் ஒருசேர பேட்டிங்கில் ஜொலித்தால் பெங்களூரு அணியால் நிமிர முடியும். இதனால் இந்த ஆட்டத்தின் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிற்பகுதியில் பனிப்பொழிவால் பேட்டிங் செய்வது எளிதாகி விடுவதால் டாஸ் வெல்லும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும். ஏற்கனவே இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தில் டெல்லி 59 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை தோற்கடித்தது நினைவு கூரத்தக்கது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை