கிரிக்கெட்

தென்னாப்பிரிக்கா - இந்தியா கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது.

தினத்தந்தி

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. அந்நாட்டுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோத உள்ளன. ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள சூழலில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா - இந்தியா கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரியத்தின் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. இரு அணியில் உள்ளவர்களுக்கும் தினமும் பரிசோதனை நடத்தப்படும் எனவும் தொற்றுக்குள்ளாகும் வீரர் தனிமைப்படுத்தப்படுவாரே தவிர கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைக்கப்படாது எனவும் மருத்துவக்குழு கூறியுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு