Image Courtesy : AFP / ICC / BCCIWomen 
கிரிக்கெட்

மாதாந்திர சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருது- வெற்றியாளர்களை அறிவித்தது ஐசிசி

இந்திய அணியின் ரேணுகா சிங் சிறந்த வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர், வீராங்கனைகள் பெயரை கடந்த சில தினங்களுக்கு முன் ஐசிசி பரிந்துரைத்து இருந்தது.

வீரர்களுக்கான பட்டியலில் இலங்கை அணியின் பிரபாத் ஜெயசூர்யா, இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் குஸ்டாவ் மெக்கியோன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். வீராங்கனைகளுக்கான பட்டியலில் இங்கிலாந்து அணியின் எம்மா லாம்ப், நடாலி ஸ்கிவர் மற்றும் இந்தியாவின் ரேணுகா சிங் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இதன் வெற்றியாளர்களை ஐசிசி அறிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்கள் வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த பிரபாத் ஜெயசூர்யா சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல் சிறந்த வீராங்கனையாக எம்மா லாம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்