Image Courtesy : @rajasthanroyals 
கிரிக்கெட்

பிரசித் கிருஷ்ணா காயம்: மாற்று வீரரை அறிவித்த ராஜஸ்தான் ராயல்ஸ்...!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

தினத்தந்தி

ராஜஸ்தான்,

இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல் 2023) தொடரி வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை-குஜராத் அணிகள் மோத உள்ளன. இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகி உள்ளனர்.

இதில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் ஒருவர். முதுகில் ஏற்பட்ட காயத்திற்காக பிரசித் கிருஷ்ணா அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். அதிலிருந்து அவர் குணம் அடைய சில வாரங்கள் ஆகும் என்பதால் நடப்பு சீசனில் பிரசித் கிருஷ்ணா பங்கேற்க மாட்டார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணியில் பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு மாற்று வீரராக சந்தீப் சர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். காயம் காரணமாக நடப்பு சீசனில் பிரசித் கிருஷ்ணா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அனுபவம் மிக்க வீரரான சந்தீப் சர்மா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 100-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த சீசனில் அவர் பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 10 சீசன்களில் விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நவ்தீப் சைனி மற்றும் ட்ரெண்ட் போல்ட் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் சந்தீப் சர்மா இணையவுள்ளார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?