கிரிக்கெட்

பிரதமர் மோடி இந்திய அணியின் டிரஸ்சிங் ரூம் சென்றது வீரர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தும்- ரவிசாஸ்திரி

உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணியின் டிரஸ்சிங் ரூமுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு இந்திய வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

புதுடெல்லி,

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. இதற்கிடையே, போட்டியை நேரில் காண வந்த பிரதமர் மோடி, இந்திய அணியின் டிரெஸ்சிங் ரூமுக்குச் சென்று, அங்கு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலானது.

இந்த நிலையில், பிரதமர் மோடி, டிரஸ்சிங் ரூம் சென்று பார்வையிட்டது வீரர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தும் என முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

"டிரஸ்சிங் ரூம் எப்படி இருக்கும் என்பதை நான் அறிந்திருப்பதாலும், கிரிக்கெட் வீரராக இருந்து பல வருடங்கள் இந்திய அணியின் பயிற்சியாளராக டிரஸ்சிங் ரூமில் இருந்ததாலும் இது ஒரு சிறந்த விஷயம் என்று நினைக்கிறேன்.

நாட்டின் பிரதமரைப் போன்ற ஒருவர் டிரஸ்சிங் ரூமுக்கு வந்து பார்வையிட்டால், அது மிகப்பெரிய ஒன்று. ஏனெனில் அது வீரர்களின் உற்சாகத்தை உயர்த்தும். இது அணிக்கு சிறப்பான தருணம்." என்று குறிப்பிட்டார். 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்