கிரிக்கெட்

2வது டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்த 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் தென்னாப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவர் என அந்நாட்டின் பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் கூறியுள்ளார்.#fastbowlers #SouthAfrica

தினத்தந்தி

கேப்டவுன்,

தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் நடந்தது. மழையால் பாதிப்படைந்த இந்த போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்தது. முதல் போட்டியை தென்னாப்பிரிக்க அணி வென்றது.

2வது டெஸ்ட் போட்டி வருகிற சனிக்கிழமை செஞ்சூரியனில் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 4 வேகப்பந்து வீச்சாளர்களை விளையாட செய்ய தென்னாப்பிரிக்க அணி முடிவு செய்துள்ளது.

இதுபற்றி அந்த அணியின் பயிற்சியாளர் கிப்சன் கூறும்பொழுது, சொந்த நாட்டில் அதிக பலத்துடன் விளையாடுவோம். எங்களிடம் அதிக தரமிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

இந்தியா போன்ற உலகின் சிறந்த அணியை வீழ்த்த வேண்டுமெனில், கடந்த காலத்தில் செய்தது போன்றில்லாமல் சற்று வித்தியாசமுடன் ஏதேனும் செய்ய வேண்டும். அதற்கு நமது பந்துவீச்சில் வேகத்தினை காட்ட வேண்டும் என கூறியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் பிலாந்தர், மோர்கெல், ஸ்டெயின் மற்றும் ரபடா என 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். எனினும் 2வது இன்னிங்சில் காயத்தினால் ஸ்டெயின் விளையாடவில்லை. இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் ஸ்டெயினுக்கு பதிலாக சிறப்பு வேகப்பந்து வீச்சாளர் டுவான் ஆலிவர் சேர்க்கப்பட்டு உள்ளார்.

#fastbowlers | #SouthAfrica

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்