சென்னை,
சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பார்வையாளர்களுக்கு,
* பைகள், தோல்பைகள், சூட்கேஸ்கள் போன்ற எந்தவிதமான பைகளையும் கொண்டு செல்லக்கூடாது.
* செல்போன்கள், ரேடியோ, கம்ப்யூட்டர்கள், மடிக்கணினிகள், ரிமோட் மூலம் இயங்கும் கருவிகள், ரிமோட் மூலம் இயங்கும் கார் சாவிகள் உள்ளிட்ட எந்தவித எலக்ட்ரானிக் பொருட்களையும் எடுத்து செல்லக்கூடாது.
* வீடியோ கேமராக்கள், பைனாகுலர், ஆடியோ பதிவு செய்யும் கருவிகள், இசை சம்பந்தமான கருவிகள் போன்ற எதனையும் எடுத்து செல்லக்கூடாது.
* சிகரெட்டுகள், பீடிகள், தீப்பெட்டிகள், வெடிபொருட்கள், பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கும் அனுமதி இல்லை.
* கண்ணாடி பொருட்கள், கத்திகள், கத்தரிக்கோல் போன்ற அனைத்து விதமான ஆயுதங்களும் எடுத்து செல்லக்கூடாது.
* தெர்மாகோல் அட்டைகள், தண்ணீர் பாட்டில்கள், கருப்பு நிறத்திலான கைக்குட்டைகள், கருப்பு கொடிகள், கருப்பு துணிகள் போன்றவற்றுக்கும் அனுமதி இல்லை.
* குளிர்பானங்கள், உணவுப்பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதி கிடையாது.
தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் எந்த செயலும் செய்யக்கூடாது. போட்டி நடைபெறும்போது சட்ட விரோத செயல்கள், வன் முறைகளில் ஈடுபட்டாலும், இன வெறியை தூண்டும் வகையில் கோஷம் எழுப்பினாலும் மைதானத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. செல்போனையும், மற்ற பொருட்களையும் கொண்டு சென்றால் மைதானத்தில் உள்ள காவலர்களிடம் ஒப்படைத்து விட்டு போட்டியை பார்க்கலாம் என ரசிகர்கள் நினைத்தால் அது முடியாது என தெரிவிக்கப்பட்டது. இப்போது செல்போன் களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. போட்டிக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே விளையாட்டு போட்டியை பார்க்கவும் பயனார்கள் சென்று உள்ளனர். சென்னை மைதானத்திற்கு கருப்புச்சட்டை அணிந்து சென்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்கு சிஎஸ்கே ஆடை வழங்கப்படுகிறது.