கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி திணறல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது. #indvsSA #freedomseries

செஞ்சூரியன்,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்க அணி 335 ரன்னும், இந்திய அணி 307 ரன்னும் எடுத்தன.

28 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில், நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ் ( 80 ரன்கள்), டீன் எல்கர் (61 ரன்கள்) ஆகியோர் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஏனைய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 91.3 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்திய அணிக்கு 287 ரன்களை வெற்றி இலக்காக தென்ஆப்பிரிக்க நிர்ணயித்தது.

பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. எம்.விஜய் 9 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 4 ரன்னிலும், கேப்டன் விராட்கோலி 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்து திணறியது. 5 -ஆம் நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் புஜாரா 17 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். பார்த்தீவ் படேல் 19 ரன்களில் வெளியேறினார். அடுத்தடுத்த இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி 33 ஓவர்கள் வரை 5 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது. ரோகித் சர்மா 17 ரன்களுடனும் ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் இன்றியும் களத்தில் உள்ளனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை