கிரிக்கெட்

கூப்பர் கனோலிக்கு பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு

பஞ்சாப் வீரர் கூப்பர் கனோலி (72 ரன்கள், 44 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

சண்டிகர்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 4வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் குஜராத் டைட்டன்சை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் கடைசி ஓவரில் திரில் வெற்றிபெற்றது.

பஞ்சாப் வீரர் கூப்பர் கனோலி (72 ரன்கள், 44 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த நிலையில், கூப்பர் கனோலிக்கு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

கூப்பர் கனோலி ஆடிய சில ஷாட்கள், குறிப்பாக ரஷித் கான் பந்து வீச்சில் ஆடிய ஷாட் நம்பமுடியாத வகையில் இருந்தது. நான் ஆட்டமிழந்ததும் எனது காயத்துக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்து கொண்டிருந்த போது நாங்கள் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற சூழலில் நிதானமாக இருக்க வேண்டியது அவசி யம். அறிமுக வீரர் கூப்பர் கோனோலி விளையாடிய விதம் அருமையாக இருந்தது. முதல் போட்டியிலேயே இவ்வளவு நிதானமாகவும், அதேநேரத் தில் அதிரடியாகவும் ஆடியது பாராட்டுக்குரியது. 3-வது ஓவருக்கு பிறகு ஆடுகளம் மெதுவாக இருப்பதை உணர்ந்தோம். வைஷாக் விஜய்குமார் (3 விக்கெட்) கடந்த சீசனில் வெளிப்படுத்திய பார்மை இந்த ஆண்டிலும் தொடருகிறார்' என்றார்.