கிரிக்கெட்

டேவிட் வார்னர் வெளியிட்ட புஷ்பா பட பாடல் ... அதிர்ச்சியடைந்த இந்திய கேப்டன்...!

வார்னரின் வீடியோவை பார்த்த கோலி,"வார்னர் நீங்கள் நன்றாகத் தானே உள்ளீர்கள்" என கலாய்த்து உள்ளார்.

தினத்தந்தி

ஆஸ்திரேலியா ,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வருபவர் டேவிட் வார்னர். கொரோனா ஊரடங்கு சமயத்தில் பிரபல இந்தி பாடல்களுக்கு மகள்கள் மற்றும் மனைவியுடன் சேர்ந்து நடனமாடி இவர் வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

பிரபல ஹீரோக்களின் முகத்திற்கு பதிலாக பேஸ் ஆப் (Face App) மூலமாக தன்னுடைய முகத்தை வைத்து வார்னர் வெளியிடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதுவரை கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு முன்னணி நடிகர்களின் வீடியோக்களை பேஸ் ஆப் மூலம் மாற்றி பதிவிட்டு அவர் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடிய வார்னர் 94 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில், தற்போது புஷ்பா பட பாடல் வீடியோவில் அல்லு அர்ஜுனுக்கு பதிலாக தன்னுடைய முகத்தை பேஸ் ஆப் மூலம் வைத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி , "வார்னர் நீங்கள் நன்றாகத் தானே உள்ளீர்கள் " என கலாய்த்து உள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை