கோப்புப்படம் 
கிரிக்கெட்

கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து ரகானே விலகல்

கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து ரகானே விலகியுள்ளதாக லிசெஸ்டர்ஷைர் அணி அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரகானே (வயது 36). இவர் இந்திய அணிக்காக 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். சமீப காலமாக மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இதன் காரணமாக அவர், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் லிசெஸ்டர்ஷைர் அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடி வருகிறார்.

இதில் ஒருநாள் தொடரில் அரையிறுதிச்சுற்று வரை முன்னேறிய லிசெஸ்டர்ஷையர் அணியானது, அரையிறுதியில் சொமர்செட் அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்தது. இருப்பினும் ஒருநாள் தொடருக்கு பிறகு கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன் இரண்டில் லிசெஸ்டர்ஷையர் அணிக்காக ரகானே விளையாடி வந்தார்.

இத்தொடரில் லிசெஸ்டர்ஷைர் அணியானது விளையாடிய 12 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வி மற்றும் 9 போட்டிகளை டிராவில் முடித்து புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில் காயம் காரணமாக நடப்பு சீசன் கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து ரகானே விலகியுள்ளதாக லிசெஸ்டர்ஷைர் அணி அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை