கிரிக்கெட்

சென்னையில் துலீப் கோப்பை கிரிக்கெட்: மேற்கு மண்டலம் முன்னிலை

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கு மண்டலம் முன்னிலை வகிக்கிறது.

தினத்தந்தி

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கு மண்டலம்-வடகிழக்கு மண்டலம் இடையிலான (4 நாள்) கால்இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த மேற்கு மண்டல அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 590 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. மேற்கு மண்டல அணி முந்தைய நாள் ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய வடகிழக்கு மண்டலம் 81.5 ஓவர்களில் 235 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

அதிகபட்சமாக அங்குர் மாலிக் 81 ரன்கள் சேர்த்தார். மேற்கு மண்டலம் தரப்பில் சின்டன் கஜா 4 விக்கெட்டும், ஜெய்தேவ் உனட்கட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 355 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டலம் ஆட்ட நேரம் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 12 ரன்கள் எடுத்தது. இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா