வெலிங்டன்,
இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இந்த நிலையில் வெலிங்டனில் தற்போது டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுளள்து.
போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்ப்டுள்ளகால் அதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்தியா- நியூசிலாந்து அணி வீரர்கள் கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர்.இந்த வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.