கிரிக்கெட்

குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் ரியான் பராக் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அகமதாபாத்,

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழா வில் இன்று அகமதாபாத்தில் நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

காயம் காரணமாக கில் இந்த போட்டியிலிருந்து விலகியதால் குஜராத் அணியின் கேப்டனாக ரஷித் கான் செயல்படுகிறார்.