கிரிக்கெட்

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்கள் இலக்கு

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

தினத்தந்தி

அபுதாபி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 36-வது லீக் ஆட்டத்தில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ப்ரித்வி ஷா மற்றும் சஞ்சு சாம்சன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

8 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான் ராஜஸ்தான் வீரர் கார்த்திக் தியாகி பந்து வீச்சில் வெளியேறினார். ப்ரித்வி ஷா 10 ரன்கள் எடுத்த நிலையில் சேதன் சகரியா பந்து வீச்சில் அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி டெல்லி அணியின் ரன் வேகத்தை வெகுவாக உயர்த்தியது. நிதனாமாக ஆடிய ரிஷப் பண்ட் 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அதிரடியாக ஆடிய ஷ்ரேயாஸ் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தெவாட்டியா பந்து வீச்சில் அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷெம்ரான் ஹிட்மயர் 28 ரன்கள் குவித்து வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் ரஹ்மான் மற்றும் சகரியா அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்க உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்