அபுதாபி,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, 36- வது லீக் ஆட்டத்தில் இன்று மாலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணி வீரர்கள் விவரம்:-
டெல்லி:- ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் அய்யர் , ரிஷப் பண்ட்(கேப்டன்) , லலித் யாதவ், ஷிம்ரன் ஹிட்மயர், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரபாடா, அண்ட்ரிட்ச் நோர்ட்ஜி, ஆவேஷ் கான்.
ராஜஸ்தான்:- ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், மஹிபால் லோமூர், ரியாங் பராக், ராகுல் தேவாட்டியா, கார்த்திக் தியாகி, சேத்தன் சகரியா, முஸ்தபிசூர் ரஹ்மான், தம்ரைஸ் ஷம்ஷீ.