கோப்புப்படம் 
கிரிக்கெட்

கொரோனா பாதிப்பு: இந்தியாவுக்கு நிதியுதவி அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் ரூ.7.5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், மருந்துகள் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது. இதனால் வெளிநாடுகள் ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை அனுப்பி வருகின்றன.

இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் ரூ.7.5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த அணியின் வீரர்கள், பயிற்சியாளர், அணி நிர்வாகிகள் மற்றும் அணியின் உரிமையாளர்கள் என அனைவரும் அணியாக இணைந்து இந்த நிதியில் பங்களிப்பு செய்துள்ளனர். ராயல் ராஜஸ்தான் அறக்கட்டளை மற்றும் பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்ட் இணைந்து இந்தியாவுக்கு உதவியுள்ளன.

இந்த நிதியை கொண்டு இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு தற்போதைய நெருக்கடி சூழலை சமாளிக்கவும், ஆக்சிஜன் தேவையை சமாளிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும், ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அணியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு