துபாய்,
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 33 வது ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங் தேர்வு செய்தார். இதன்படி பெங்களூரு அணி பந்து வீச்சைத்துவங்க உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றியும் ( சென்னை, பஞ்சாப், ஐதராபாத் அணிகளுக்கு எதிராக ), 5 தோல்வியும் கண்டு 6 புள்ளிகள் பெற்று பின்தங்கி இருக்கிறது.
விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த முறை துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த அணி 8 ஆட்டத்தில் ஆடி 5-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் அடைந்து 10 புள்ளிகள் பெற்றுள்ளது.