கிரிக்கெட்

பந்துவீச்சாளர்களுக்கு ’சிம்ம சொப்பனம்’ ... ரஜத் படிதாரை புகழ்ந்த இர்பான் பதான்

நேற்றைய போட்டியில் ரஜத் படிதார் 17 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

சென்னை,

இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், ரஜத் படிதாரின் நேற்றைய ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி 240/4 ரன்கள் குவித்து, மும்பை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த போட்டியில் ரஜத் படிதார் 17 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இந்நிலையில், இது குறித்து பேசிய இர்பான் பதான்,

’ரஜத் படிதார் பந்துவீச்சாளர்களுக்கு ’சிம்ம சொப்பனம்’ ஆக மாறியுள்ளார். கிரீஸில் வந்தவுடன் முதல் பந்திலிருந்தே அதிரடியை தொடங்குகிறார். அதன் மூலம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறார். அவர் களமிறங்கியதும் ஆட்டத்தின் வேகம் மாறி விடுகிறது.

Also read:ஐபிஎல் - ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு

’ரஜத் படிதார் பந்துவீச்சாளர்களுக்கு ’சிம்ம சொப்பனம்’ ஆக மாறியுள்ளார். கிரீஸில் வந்தவுடன் முதல் பந்திலிருந்தே அதிரடியை தொடங்குகிறார். அதன் மூலம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறார். அவர் களமிறங்கியதும் ஆட்டத்தின் வேகம் மாறி விடுகிறது.

அவர் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்தும் பவுண்டரியை தாண்டும்போலத் தோன்றுகிறது. அவர் ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசையில் மிகப்பெரிய பலமாக விளங்குகிறார்’ என்றார்.