கிரிக்கெட்

ரஜினிகாந்த் பிறந்தநாள்: நெஞ்சில் படம் வரைந்து வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்...!

நடிகர் ரஜினிகாந்தின் 71-வது பிறந்தநாள் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் களைகட்டி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். கடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகனாக இருக்கும் ரஜினிகாந்த், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு ஆங்கிலம் என 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான 'அண்ணாத்த' படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தநிலையில் அவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால், சமூக வலைதளங்களில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். அவருக்கு நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் டுவிட்டர் பதிவில்,

என் மாருமேல சூப்பர் ஸ்டார்" 80's பில்லாவும் நீங்கள் தான். 90's பாட்ஷாவும் நீங்கள் தான். 2k அண்ணாத்த நீங்கள் தான். சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா ரஜினிகாந்த். அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினிகாந்த்...... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என டுவிட்டதில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்