கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடக அணி இன்னிங்ஸ் வெற்றி

ரஞ்சி கிரிக்கெட்டில் மராட்டியத்துக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடக அணி இன்னிங்ஸ் வெற்றி

தினத்தந்தி

புனே,

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் புனேயில் நடந்த மராட்டியம்-கர்நாடக அணிகள் (ஏ பிரிவு) இடையிலான லீக் ஆட்டத்தில் மராட்டிய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய கர்நாடக அணி 5 விக்கெட் இழப்புக்கு 628 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால் 304 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இதனை அடுத்து 383 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய மராட்டிய அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து இருந்தது. கெய்க்வாட் 61 ரன்னுடனும், திரிபாதி 33 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய மராட்டிய அணி, கர்நாடக வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 66.2 ஓவர்களில் 247 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் கர்நாடக அணி இன்னிங்ஸ் மற்றும் 136 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கர்நாடக அணி தரப்பில் அபிமன்யு மிதுன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். முச்சதம் அடித்த மயங்க் அகர்வால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு