கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-உத்தரபிரதேசம் ஆட்டம் கோவையில் இன்று தொடக்கம்

லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) தமிழ்நாடு-உத்தரபிரதேசம் அணிகள் மோதுகின்றன.

தினத்தந்தி

கோவை,

91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதன் 5-வது லீக் ஆட்டம் இன்று முதல் 19-ந் தேதி வரை பல்வேறு இடங்களில் நடக்கிறது.

இதில் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர்.கல்லூரி மைதானத்தில் நடைபெறும் ஒரு லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) தமிழ்நாடு-உத்தரபிரதேசம் அணிகள் மோதுகின்றன.

தமிழக அணி ஜார்கண்ட், ஆந்திராவிடம் தோல்வி கண்டது. நாகாலாந்து, விதர்பா அணிகளுடன் டிரா கண்டது. உத்தரபிரதேச அணி 4 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. 2 ஆட்டம் டிராவில் முடிந்தது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. மற்ற ஆட்டங்களில் பெங்கால்-அசாம், விதர்பா-பரோடா, பஞ்சாப்-மராட்டியம், கர்நாடகா-சண்டிகார், மும்பை-புதுச்சேரி அணிகள் சந்திக்கின்றன.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு