கிரிக்கெட்

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி ரஷித்கான் உலக சாதனை

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி ரஷித்கான் உலக சாதனை படைத்தார்.

தினத்தந்தி

டேராடூன்,

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. முகமது நபி 81 ரன்கள் (36 பந்து, 6 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார். அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் ஹாட்ரிக் உள்பட தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தியதும் அடங்கும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்த தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்